5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓடிடியில் ரிலீஸாகும் ரஜினியின் வேட்டையன்..! எப்போது தெரியுமா?

தமிழ் பிரபல நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன். கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாகி 4 வாரங்களான நிலையில் ஓடிடியில் எப்போது வெளியாகும் என மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது.

barath-murugan
Barath Murugan | Published: 03 Nov 2024 15:49 PM
தமிழ் பிரபல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரமாக நடித்த இந்த வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள் பகத் பாசில், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும்  அபிராமி எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

1 / 6
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழி பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது. நடிகர் ரஜினியின் 171வது திரைப்படமான வேட்டையன் சுமார் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

2 / 6
இப்படத்தின் கதைக்களமானது கல்வியின் பெயரில் மோசடி செய்யும் ஒரு கும்பலை என்கவுண்டர் செய்யும் ஆக்ஷன் மற்றும் க்ரைம் கதைகளை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய திரைப்படமாகும். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்  பெற்று வசூல் வேட்டையில் பல கோடிகளை வாரிக் குவித்ததுள்ளது.  .

3 / 6
இந்தி சினிமா பிரபலமான நடிகர் அமிதாப்பச்சன் இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ரஜினியுடன்  "ஹாம்" என்ற திரைப்படத்திற்குப் பிறகு சுமார்  33 வருடங்கள் கழித்து இருவரும் இந்த திரைப்படத்தில்  ஒன்றாக நடித்துக் குறிப்பிடத்தக்கது.

4 / 6
இந்த வேட்டையன் திரைப்படம் வெளியாகி சுமார் 25 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலகளாவிய வசூலில்  258.70 கோடிகளை வசூல் செய்துள்ளது. தற்போது அமரன் திரைப்படத்தில் வருகையால் இந்த திரைப்படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 6
திரையரங்குகளில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற வேட்டையன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சுமார் 90 கோடிகளைக் கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிலையில் ஓடிடியில் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் வேட்டையன் வருகின்ற   நவம்பர் 8 தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

6 / 6
Latest Stories