‘கூலி’ ஷூட்டிங் வீடியோ… நொந்து பேசிய லோகேஷ்.. நடந்தது என்ன? - Tamil News | Actor Rajini's Coolie Movie Shooting Nagarjuna Fighting Video Leaked | TV9 Tamil

‘கூலி’ ஷூட்டிங் வீடியோ… நொந்து பேசிய லோகேஷ்.. நடந்தது என்ன?

Published: 

19 Sep 2024 21:29 PM

Coolie Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ திடீரென இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது குறித்து இயக்குநர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்

1 / 6தமிழ்

தமிழ் திரையுலகில் தற்போது மாஸான திரைப்படங்களைக் கொடுத்து வருபவர் இயக்குநர் "லோகேஷ் கனகராஜ்". இவர் 2017ல் வெளியான "மாநகரம்" என்ற திரைப்பட மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார், அதன் பிறகு 2019ல் நடிகர் கார்த்திக் நடிப்பில் "கைதி" திரைப்படமானது சூப்பர் டூப்பர் ஹிட்டை லோகேஷிற்கு கொடுத்தது.

2 / 6

அதன் பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு அடுத்தடுத்த வெற்றியைத் தந்தது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வேற லெவல் ஹிட்

3 / 6

தற்போது "சன் பிக்சர்ஸ்" தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் "கூலி". இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

4 / 6

இப்படம் நடிகர் ரஜினியின் 171வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 2023 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த அடுத்த அப்டேட்டை படக்குழு அறிவித்தது. தற்போது இப்படத்தின் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

5 / 6

இந்நிலையில், நடிகர் நாகர்ஜுனாவை வைத்துப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்தது . இந்த வீடியோவை காட்சிகளை செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்

6 / 6

"இந்த ஒரு பதிவினால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீண் போனது", "ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்". எனத் தனது " எக்ஸ்" பக்கத்தில் கூறியுள்ளார்.

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version