5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

7 நாட்களில் ’அமரன்’ செய்த வசூல்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிகளா?

Amaran Movie Collection : தமிழ் சினிமாவில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெளியாகி 7 நாட்களான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 4க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

barath-murugantv9-com
Barath Murugan | Published: 07 Nov 2024 18:21 PM
நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1 / 5
உலகநாயகன் கமலஹாசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு நடிகரும், பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான மின்னலே, உயிரே மற்றும் வெண்ணிலவு சாரல் என்ற இந்த மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று  இணையத்தில் ட்ரெண்டிங்  பட்டியலில் உள்ளது.

2 / 5
கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான  இத்திரைப்படமானது ஆக்ஷ்ன், எமோஷன் மற்றும் விறுவிறுப்பான  கதைக்களத்துடன் உருவாக்கி உள்ளது. இப்படத்தில்  சிவகார்த்திகேயன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

3 / 5
இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளிலே தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடிகளையும் , உலகளாவிய வசூலில் 21 கோடிகளையும் வசூல் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் உலகளாவிய வசூலில் 100 கோடிகளை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. தொடர்ந்து திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என  அமரன் திரைப்பட வெற்றியைக்  கொண்டாடி வருகிறது.

4 / 5
தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 7 நாட்களைக் கடந்த நிலையில்   தமிழ்நாட்டில்  மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? அமரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 89.7 கோடிகளையும் உலகளாவிய வசூலில் 180  கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இன்னும் விரைவில் தமிழ்நாட்டில் 100 கோடியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Latest Stories