‘அமரன்’ படம் வசூல் தொடங்கிடுச்சு.. மாஸ் காட்டும் ப்ரீ புக்கிங்! - Tamil News | Actor Sivakarthikeyan Amaran Movie Pre Booking Box office Collection Details | TV9 Tamil

‘அமரன்’ படம் வசூல் தொடங்கிடுச்சு.. மாஸ் காட்டும் ப்ரீ புக்கிங்!

Published: 

30 Oct 2024 11:18 AM

Amaran Movie : தமிழ்த் திரைப்படங்களில் தீபாவளியை முன்னிட்டு நிறைய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வருவதுண்டு. அந்த வகையில் இந்த தீபாவளிக்குத் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரின் திரைப்படங்கள் வெளியாகப் போகின்றன. அந்த விதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வெளியாக உள்ளது.

1 / 6தமிழில்

தமிழில் பிரபல நடிகராகவும் தற்போது உச்ச பிரபலங்களுக்கு டப் கொடுக்கும் விதத்தில் தமிழ் சினிமாவை கலக்கிவரும் நடிகர் சிவகார்த்திகேயன். திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரமாக அறிமுகமாகி பின் தனது திறமையினால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் நடித்த பையோ கிராஃபிக் திரைப்படம்தான் அமரன்.

2 / 6

பிரபல இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இந்த அமரன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹீரோவின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல் இந்த திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரமும் அவ்வளவு முக்கியமானது என இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.

3 / 6

இந்த மாபெரும் திரைப்படத்தை ராஜ்குமார் இயக்க நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது ரீலிஸிற்கு தயாராகிவருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரெமோஷன் வேலைகள் நடந்துவரும் நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.

4 / 6

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளைப் பெற்றுவரும் நிலையில் அடுத்தடுத்த சர்ப்ரைஸை கொடுக்கும் விதமாக இந்த பாடல்கள் மக்களிடையே பிரபலமானது.

5 / 6

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமைந்த பிரம்மாண்ட திரைப்படமான இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகியது. இந்நிலையில் 31ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் நடந்துவரும் நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

6 / 6

அமரன் திரைப்படம் இதுவரையில் உலகளாவிய ப்ரீ புக்கிங்கில் சுமார் 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் ப்ரீ புக்கில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பிரம்மாண்டமான ஓப்பனிங் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா? இதை பண்ணுங்க
குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க
படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?