சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ஒரு வார வசூல்.. வெளியான தகவல்! - Tamil News | Actor Surya Kanguva Movie 7th Day Box Office Collection Details | TV9 Tamil

சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ஒரு வார வசூல்.. வெளியான தகவல்!

Published: 

21 Nov 2024 17:35 PM

kanguva collection : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வருபவர்தான் சிறுத்தை சிவா. இவரின் இயக்கத்திலும் நடிகர் சூர்யாவின் முக்கிய நடிப்பிலும் பல் கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியானது கங்குவா. கடந்த நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியானது

1 / 5கங்குவா

கங்குவா திரைப்படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 7 நாட்கள் முடிந்த நிலையில் இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? கங்குவா மொத்த வசூலில் சுமார் ரூ 97 கோடிகளை வசூல் செய்துள்ளதாகவும், மற்றும் தமிழ் நாட்டில் ரூ 34 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2 / 5

தமிழ்த் திரைப்படத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் முதன்மையாக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்ககத்தில், ஸ்டூடியோ க்ரீன் மற்றும் யுவி க்ரியேஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் கங்குவா. சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

3 / 5

இந்த திரைப்படத்தில் துணை நடிகர்களாக பாபி தியோல், திஷா பாதணி, கோவை சரளா, நட்டி நடராஜன், மற்றும் போஸ் வெங்கட் எனப் பலரும் நடித்திருந்தனர். அதிலும் நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

4 / 5

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியிலும் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் பல எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றப்பட்டதாகக் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

5 / 5

இந்த திரைப்படத்திற்குத் திரைக்கதைகள் மூலம் பல விமர்சனங்கள் வந்தாலும், இப்படத்தின் ஒலி அதிகமாக இருக்கிறது என்றுமே அதிக விமர்சனங்கள் மக்களால் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து திரையரங்குகள் உரிமையாளர்களிடமும் 2 புள்ளிகள் சத்தத்தைக் குறைத்து வைக்கும்படி கோரிக்கை வைத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?