5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kanguva: 9 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல் எவ்வளவு?

Kanguva Box Office Collection : தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பிலும் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திலும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugan
Barath Murugan | Published: 23 Nov 2024 16:26 PM
சூர்யாவின்  நடிப்பில் கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகியது. தமிழ் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்காகத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான "யொலோ" மற்றும் "ஆதி நெருப்பே" போன்ற பாடல்கள்  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

1 / 5
தயாரிப்பாளர் ஞானவேல் தயாரிப்பின் கீழ் ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி க்ரியேஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து  பாபி தியோல், திஷா பாதணி, கோவை சரளா, நட்டி நடராஜன், மற்றும் போஸ் வெங்கட் எனப் பலரும் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் கார்த்திக் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுமார் 2 வருடங்களுக்கு மேல் கடின முயற்சியால் உருவான இந்த திரைப்படம் பல கலவையான விமர்சனங்களைப்  பெற்றுள்ளது.

2 / 5
கங்குவா திரைப்படம் கி.பி. 1070 ஆண்டு பெருமாச்சி தீவில் நடிகர் சூர்யா இளவரசனாக இருப்பதுபோல் தொடங்கும். இந்த திரைப்படம் ஆக்ஷ்ன் மற்றும் கடந்த காலம்,  நிகழ் காலம் என்ற வித்தியாசமான கதைகளுடன் இந்த திரைப்படம் இருக்கிறது. சுமார்  ரூ, 350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

3 / 5
இந்த திரைப்படம் வெளியான முதலே பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. படத்தின் ஒலி, நிகழ்கால காட்சிகள் குறித்தும் மற்றும் படத்தின் பின்னணி இசை எனத் தொடர்ந்து  பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு நடிகை ஜோதிகா பதிலடி கொடுக்கும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து திரை பிரபலங்கள் விமர்சித்து வருகின்றனர்.

4 / 5
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி தற்போது 9 நாட்களைக் கடந்த நிலையில் , கங்குவா திரைப்படம் உலகளாவிய வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டி உள்ளது.  தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.30.6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம்  தற்போது வரை ரூ.100 கோடியை மட்டும் வசூல் செய்துள்ளதால்  கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

5 / 5
Latest Stories