இத்தனை கோடிகளா..! பிக்பாஸ் 8 நிகழ்ச்சியைத் தொகுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? - Tamil News | Actor Vijay Sethupathi Salary for Bigg Boos Season 8 Tamil | TV9 Tamil

இத்தனை கோடிகளா..! பிக்பாஸ் 8 நிகழ்ச்சியைத் தொகுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Published: 

06 Oct 2024 11:35 AM

Bigg Boss 8 : தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டி.வியில் முன்னணி நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியாகும். இதுவரை சுமார் 7 சீசன் நிகழ்ச்சிகள் வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 8 தமிழ் அக்டோபர் 6ல் வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளம் எத்தனை கோடிகள் தெரியுமா?

1 / 7தமிழ்

தமிழ் மக்களிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றாலே நினைவுக்கு வருவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ல் இருந்து ஆண்டுக்கு ஒரு சீசன் என தற்போது வரை 7 சீசன் வெளியாகியுள்ளது.

2 / 7

இந்த நிகழ்ச்சியில் ஒரு ஒரு சீசனிலும் சுமார் 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியானது மொத்தம் 100 நாட்கள் நடக்கும் விதத்தில் வாரத்திற்கு ஒருவர் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

3 / 7

இந்த நிகழ்ச்சியானது பல்வேறு மொழிகளில் வெளியாகிப் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துள்ளார். அந்த விதத்தில் தமிழில் வெளியான பிக்பாஸ் 7 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் இணையத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்புவும் தொகுத்துள்ளார்.

4 / 7

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சில பல காரணங்களால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நான் தொகுக்கப் போவதில்லை. அதனால் மக்கள் என்னை மன்னிக்குமாறு தனது இணையப் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார் .

5 / 7

இதன் காரணமாக தற்போது சீசன் 8ல் நடிகர் விஜய் சேதுபதி தொகுக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் தமிழ் நிகழ்ச்சியை இவர்தான் தொகுக்க உள்ளார் என ஆக்கப்பூர்வமான அறிவிப்பையும் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது.

6 / 7

நடிகர் கமலிற்கு அடுத்ததாக தற்போது இவர்தான் தொகுக்க உள்ளார் என உறுதியாகியது. இந்த பிரபல நிகழ்ச்சியில் தொகுக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளத்தைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த நிகழ்ச்சியைத் தொகுக்க அவர் எவ்வளவு வாங்கியுள்ளார் தெரியுமா?

7 / 7

இந்த சீசன் 8யை தொகுக்க நடிகர் விஜய் சேதுபதி சுமார் 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்க சுமார் 130 கோடிக்கு மேல் வாங்கியுள்ளாராம். இந்த தகவலானது தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

Follow Us On
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
Exit mobile version