பாலிவுட் என்ன பாலிவுட்.. சீனாவில் மகாராஜா.. விஜய் சேதுபதிக்கு அடுத்த வெற்றி! - Tamil News | Actor Vijay Sethupathi's Maharaja is released in China | TV9 Tamil

பாலிவுட் என்ன பாலிவுட்.. சீனாவில் மகாராஜா.. விஜய் சேதுபதிக்கு அடுத்த வெற்றி!

Published: 

16 Nov 2024 16:56 PM

Maharaja China Release : தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதமவெளியான் திரைப்படம் "மகாராஜா". இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மகாராஜா பாலிவுட் வெற்றி திரைப்படங்களைப் போல சீனாவில், சீன மொழியில் வெளியாக உள்ளது.

1 / 6நடிகர்

நடிகர் விஜய் சேதுபதி. 2010ம் ஆண்டு தமிழில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மற்றும் சூது கவ்வும் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

2 / 6

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி, குணசித்திர நடிகர் முதல் வில்லன் என மிரட்டியுள்ளார். இவரின் நடிப்பில் 2024ல் மகாராஜா என்ற படம் வெளியானது.

3 / 6

குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைக்கதைகளுடன் அமைந்த இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யா பாரதி மற்றும் சிங்கம் புலி அருள்தாஸ், சச்சனா போன்ற பல பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

4 / 6

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் வெறும் ரூ 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரையிலும் மொத்தமாக ரூ 110 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்தது. குறைந்த நிதிநிலையில் உருவாக்கி மாபெரும் வெற்றியினை பெற்ற இந்த திரைப்படம் தற்போது சீன மொழியில் டப்பிங் செய்து கூடிய விரைவில் சீனாவில் வெளியாக உள்ளதாம்.

5 / 6

தமிழ் வெளியான இந்த திரைப்படம் தனது வெற்றியினை அடுத்தாக பாலிவுட், டோலிவுட் போன்ற மொழி திரைப்படங்களைப் போல இந்த திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பி.கே மற்றும் அந்தாதுன் போன்ற திரைப்படங்களைப் போலச் சீனாவிலும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

6 / 6

சீன மொழியில் வெளியான தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பி.கே மற்றும் அந்தாதுன் போன்ற இந்தியத் திரைப்படங்கள் சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல் சீனாவில் வசூல் செய்த நிலையில் தற்போது மகாராஜா திரைப்படமும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீன மொழியில் டப்பிங் இறுதிக்கட்ட பணியிலிருந்துவரும் நிலையில் இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி சீனாவில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை டாப்ஸி பன்னுவின் வொண்டர்ஃபுல் ஆல்பம்
டீன் ஏஜில் நடிகை மிருணாள் தாக்கூர்... வைரல் போட்டோ
மயோனைஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க இதை பண்ணுங்க