5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பூஜையுடன் தொடங்கியது விஜயின் ‘தளபதி 69’ படப்பிடிப்பு – வைரலாகும் போட்டோஸ்

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2024 17:41 PM
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1 / 5
வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றுள்ளது.

2 / 5
கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

3 / 5
விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது.

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது.

4 / 5
கடந்த மாதம் தயாரிப்பு நிறுவனம் இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று குறிப்பிட்டு படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதையும் இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 5
Follow Us
Latest Stories