காதலை கொண்டாடும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ் - Tamil News | Actors Siddharth and Aditi Rao wedding photos viral on social media | TV9 Tamil

காதலை கொண்டாடும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதி… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

Published: 

02 Dec 2024 16:45 PM

சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமணம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் அது நடைபெறவில்லை.

1 / 6நடிகர் சித்தார்த் கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது. இந்தப் புகைப்படங்களை நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது. இந்தப் புகைப்படங்களை நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

2 / 6

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கடந்த 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

3 / 6

இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என பதிவிட்டிருந்தார். அதிதியும் இதேபோல பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4 / 6

சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதே கோயிலில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

5 / 6

நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாகவே சித்தார்த் நடத்தினார். சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமணம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் அது நடைபெறவில்லை.

6 / 6

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..