அழகியே… ஹேப்பி பர்த்டே அதிதி ராவ்! - Tamil News | Actress Aditi Rao celebrate her 38th Birthday today | TV9 Tamil

அழகியே… ஹேப்பி பர்த்டே அதிதி ராவ்!

Published: 

28 Oct 2024 14:51 PM

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கடந்த 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

1 / 5அதிதி

அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆறு வயதில், டெல்லியின் புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.

2 / 5

தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதி இடம் பிடித்தார் அதிதி ராவ். அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா படங்களிலும் நடித்துள்ளார்.

3 / 5

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கடந்த 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

4 / 5

இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் இருவருக்கும் செப்டம்பர் திருமணம் நடைபெற்றுள்ளது.

5 / 5

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகை அதிதி ராவ் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!
உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது