அழகில் சொக்க வைக்கும் நடிகை அதிதி ராவின் ஆல்பம்! - Tamil News | Actress Aditi Rao red dress photos viral on social media | TV9 Tamil

அழகில் சொக்க வைக்கும் நடிகை அதிதி ராவின் ஆல்பம்!

Published: 

28 Nov 2024 22:24 PM

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது திருமணத்தின் போது எடுத்தப் புகைப்படங்களை நடிகை அதிதி ராவ் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

1 / 5அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆறு வயதில், டெல்லியின் புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.

அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆறு வயதில், டெல்லியின் புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.

2 / 5

தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதி இடம் பிடித்தார் அதிதி ராவ். அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா படங்களிலும் நடித்துள்ளார்.

3 / 5

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கடந்த 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

4 / 5

இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் இருவருக்கும் செப்டம்பர் திருமணம் நடைபெற்றுள்ளது.

5 / 5

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி ராவ் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது திருமணத்தின் போது எடுத்தப் புகைப்படங்களை நடிகை அதிதி ராவ் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் கவனம்பெறும் அதிதியின் நியூ ஆல்பம்
பெண்களுக்கு இதெல்லாம் வழங்க வேண்டும் - ஐஸ்வர்யா ராய்
கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..