சமத்துவமும், சம வாய்ப்பும் பெண்களுக்கு வழங்க வேண்டும் – ஐஸ்வர்யா ராய்! - Tamil News | Actress Aishwarya Rai calls for change and equality in womens empowerment in Global Womens Forum in Dubai | TV9 Tamil

சமத்துவமும், சம வாய்ப்பும் பெண்களுக்கு வழங்க வேண்டும் – ஐஸ்வர்யா ராய்!

Updated On: 

28 Nov 2024 20:42 PM

உலக அழகி பட்டம் முதல் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வரை பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தக்காரர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலகளவில் இந்தியாவின் அடையாளமாகவும் உள்ளார். தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார்.

1 / 7கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் துளு பேசும் இந்து குடும்பத்தில் 1973-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1991-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், சர்வதேச சூப்பர் மாடல் விருது வென்றார். 1993-ம் ஆண்டு அமீர்கான் மற்றும் மஹிமா சவுத்ரியுடன் பெப்சி விளம்பரத்தில் நடித்து பிரபலமானார்.

கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் துளு பேசும் இந்து குடும்பத்தில் 1973-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1991-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், சர்வதேச சூப்பர் மாடல் விருது வென்றார். 1993-ம் ஆண்டு அமீர்கான் மற்றும் மஹிமா சவுத்ரியுடன் பெப்சி விளம்பரத்தில் நடித்து பிரபலமானார்.

2 / 7

1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று மொத்த உலகத்தையே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். அப்போது உலகின் அமைதியே தனது கனவு என்று பேசினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

3 / 7

கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாரான இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் புஷ்பவள்ளி மற்றும் கல்பனா என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

4 / 7

1998-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் மற்றும் நாசர் இரட்டை கதாபாத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம். இதில் மதுமிதா கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரால் கொண்டாடப்பட்ட வெற்றி திரைப்படமாகும்.

5 / 7

இதனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2 என தமிழில் நடித்தது குறைவான படங்கள் என்றாலும் அந்த அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

6 / 7

உலக அழகி பட்டம் முதல் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வரை பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தக்காரர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலகளவில் இந்தியாவின் அடையாளமாகவும் உள்ளார். தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார்.

7 / 7

இந்த நிலையில் துபாயில் பெண்கள் ஸ்தாபனம் சார்பில் நடத்தப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகள் அளவிலான உலக பெண்கள் பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் பேசுகையில் உலகம் முழுவதும் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

இணையத்தில் கவனம்பெறும் அதிதியின் நியூ ஆல்பம்
பெண்களுக்கு இதெல்லாம் வழங்க வேண்டும் - ஐஸ்வர்யா ராய்
கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..