முழுமதி அவளது முகமாகும்… ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய்! - Tamil News | Actress Aishwarya rai celebrate her 51 birthday today | TV9 Tamil

முழுமதி அவளது முகமாகும்… ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய்!

Published: 

01 Nov 2024 12:14 PM

1998-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் மற்றும் நாசர் இரட்டை கதாபாத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம். இதில் மதுமிதா கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்பட்ட வெற்றி திரைப்படமாகும்.

1 / 7கர்நாடகா

கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் துளு பேசும் இந்து குடும்பத்தில் 1973-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1991-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், சர்வதேச சூப்பர் மாடல் விருது வென்றார். 1993-ம் ஆண்டு அமீர்கான் மற்றும் மஹிமா சவுத்ரியுடன் பெப்சி விளம்பரத்தில் நடித்து பிரபலமானார்.

2 / 7

1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று மொத்த உலகத்தையே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். அப்போது உலகின் அமைதியே தனது கனவு என்று பேசினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

3 / 7

கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் புஷ்பவள்ளி மற்றும் கல்பனா என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

4 / 7

1998-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் மற்றும் நாசர் இரட்டை கதாபாத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம். இதில் மதுமிதா கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்பட்ட வெற்றி திரைப்படமாகும்.

5 / 7

இதனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2 என தமிழில் நடித்தது குறைவான படங்கள் என்றாலும் அந்த அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

6 / 7

உலக அழகி பட்டம் தொடங்கி இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வரை பல விருதுக்கும், புகழுக்கும் சொந்தக்காரர். உலகளவில் இந்தியாவின் அடையாளமாகவும் உள்ளார். தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார்.

7 / 7

இந்த நிலையில் இன்று நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப் - என்ன தெரியுமா?
ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தேங்காய் பால்..!
வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பயோ டேட்டா.. சினிமா லைஃப்!