இந்த குழந்தை யார் தெரியுமா? ரியாலிட்டி ஷோ டூ சினிமா வந்து கலக்கும் நடிகை! - Tamil News | Actress Aishwarya Rajesh Childhood Photos Viral On Social Media | TV9 Tamil

இந்த குழந்தை யார் தெரியுமா? ரியாலிட்டி ஷோ டூ சினிமா வந்து கலக்கும் நடிகை!

Published: 

25 Oct 2024 18:32 PM

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் பிரபலமானவர் இவர். தனது அசாதாரணமான நடிப்பினால் டோலிவுட், மாலிவுட் மற்றும் கோலிவுட் எனத் தென்னிந்திய திரைத்துறை கலக்கிவரும் நடிகை. இவர் ரியாலிட்டி ஷோ மூலம் களமிறங்கி தற்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்

1 / 6சமீபகாலமாக

சமீபகாலமாக சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் சினிமா பற்றிய தகவல்கள் மக்களுக்கு மிக எளிதாகச் சென்றடைகிறது. அந்தவகையில் நடிகர்கள் மற்றும் அவர்களின் சிறுவயது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக்குவது உண்டு அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 / 6

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 1990ம் ஆண்டில் ஜனவரி 10 தேதி சென்னையில் பிறந்துள்ளார். இவரின் தந்தை ராஜேஷ் 80களில் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல நடிகர் ஆவார். மற்றும் அவரது தாய் நாக மணி ஒரு பிரபல மிக்க நடனக் கலைஞர் ஆவார்.

3 / 6

சிறுவயதிலிருந்து சென்னையில் வளர்ந்த இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது முதல் நிலை படிப்பை முடித்துள்ளார். பின் இளங்கலை படமான வணிகவியல் பட்டபடிப்பட் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்துள்ளார். தனது தாயின் மூலமாக நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா படிக்கும் பொது கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார்.

4 / 6

பின் இவர் சன் டிவியில் வெளியான "அசத்தப் போவது யாரு" என்ற ரீயாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தனது மீடியா பயணத்தைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து 2010ல் இயக்குநர் பன்ச் பரத் இயக்கத்தில் வெளியான "நீதானா அவன்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

5 / 6

தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவந்த இவர் 2017ல் தனது முதல் மலையாள திரைப்படமான "ஜோமொண்டே சுவிசேசங்கள்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்திலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாலிவுட் திரைத்துறையிலும் வாய்ப்புகள் தேடிவந்தனர். தமிழ் சினிமாவில் இவருக்குப் பிரம்மாண்டமான வெற்றி திரைப்படமாக 2018ல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "வட சென்னை" படம் அமைந்தது.

6 / 6

தற்போது இவரின் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ARM என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கருப்பர் நகரம், உத்தரகாண்ட மற்றும் தீயவர் குலைகள் நடுங்க போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!
நீல நிற புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!