கோலிவுட்டின் முன்னணி நடிகை இந்த சிறுமி… யார் தெரியுதா? - Tamil News | Actress Aishwarya Rajesh childhood viral on social media | TV9 Tamil

கோலிவுட்டின் முன்னணி நடிகை இந்த சிறுமி… யார் தெரியுதா?

Published: 

08 Aug 2024 22:09 PM

Actress Aishwarya Rajesh: தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன. சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 / 7இயக்குநர்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தில் அவரது துடுக்குதனமான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது.

2 / 7

சினிமாவில் தனது திறமையால் குறுகிய காலத்தில் உயரத்திற்கு சென்ற நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

3 / 7

தொடர்ந்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

4 / 7

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

5 / 7

கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தப் படம் ‘கனா’. விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

6 / 7

தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன.

7 / 7

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version