டிசம்பரில் கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? - Tamil News | Actress Keerthi suresh Get To marriage Business Man Antony Thattil Viral On Social Media | TV9 Tamil

டிசம்பரில் கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Updated On: 

19 Nov 2024 11:23 AM

Actress Keerthy suresh :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தற்போது பான் இந்தியம்க் கதாநாயகியாக இருந்துவருகிறார். கீர்த்தி சுரேஷ் திருமணத்தைப் பற்றி அவ்வப்போது தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவரின் திருமண தேதி மற்றும் நீண்ட நாள் காதலரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 / 6நடிகை

நடிகை கீர்த்தி சுரேஷ் 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாகத் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தவர், இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகளாவார். கீர்த்தி சுரேஷ் 2013ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

2 / 6

மலையாள திரைப்படங்களில் நடித்து திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படமாக அமைந்ததுதான் "இது என்ன மாயம்". 2015ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்காகச் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் வென்றார்.

3 / 6

ஆரம்பக் காலத்தில் சினிமாவுடன் சேர்ந்து ஃபேஷன் டிசைனில் ஆர்வம் காட்டி வந்தார். மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். 2016ம் ஆண்டு வெளியான "நேனு சைலஜா" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவருக்குத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் தேடிவந்தன

4 / 6

தமிழில் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக ரஜினி முருகன், ரெமோ, பைரவா, மகாநதி, மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் அமைந்த நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களை தாண்டி தற்போது "பேபி ஜான்" என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

5 / 6

பான் இந்திய நடிகையாக இருந்துவரும் இவரின் திருமணத்தைக் குறித்து அவ்வப்போது தகவல்கள் பரவி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் அந்த தகவலைக் குறித்து அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வருகின்ற டிசம்பர் 11ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அவரின் 15 வருட கால நண்பரைத் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

6 / 6

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தைக் குறித்து தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரின் காதலர் யார் என்று மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கணவர் வேறு யாருமில்லை பிரபல தொழிலதிபர் "ஆண்டனி தட்டில்" என்று கூறப்படுகிறது. கொச்சி இருந்து துபாய் சென்று செட்டிலாகிய இவருடன் வரும் டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகிவருகிறது.

காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?