5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கிறிஸ்துவ முறைப்படி கல்யாணம்…கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் போட்டோஸ்

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும் இன்று தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Dec 2024 06:30 AM
நடிகை கீர்த்தி சுரேஷ் 1992 ஆண்டு அக்டோபர் 17 -ம் அன்று கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரது தந்தை சுரேஷ் குமார் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது அம்மா மேனகாவும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

1 / 10
நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட் சினிமா மட்டும் இன்றி, தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். கீர்த்தி கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும்  மலையாளத்தை விட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.

2 / 10
நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும் இன்று தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.

3 / 10
தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

4 / 10
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.சாவித்திரி கதாப்பாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

5 / 10
கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

6 / 10
அதனை தொடர்ந்து தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி அதிரடியாக நடித்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரின் மூலம் தெரியவந்தது.

7 / 10
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக கீர்த்தி தனது சமூகவலைதள பக்கத்தில் காதலர் ஆண்டனி உடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 15 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறோம் என கூறியிருந்தார்.

8 / 10
இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த 12-ம் தேதி கோவாவில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமண விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் முன்னதாக இணையத்தில் வெளியாகி வைரலானது.

9 / 10
இந்த நிலையில் நேற்று டிசம்பர் 15-ம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் தம்பதிக்கு கிருஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

10 / 10
Latest Stories