வணிகவியல் படிப்பு டூ சினிமா.. நடிகை மடோனாவின் திரைப்பயணம்! - Tamil News | Actress Madonna Sebastian Recent Photos Viral On Social Media | TV9 Tamil

வணிகவியல் படிப்பு டூ சினிமா.. நடிகை மடோனாவின் திரைப்பயணம்!

Published: 

16 Oct 2024 19:57 PM

பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆகி காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை மடோனா. வணிகவியல் படித்து சினிமாவில் எண்ட்ரியான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

1 / 6நடிகை

நடிகை மடோனா செபாஸ்டின் 1992ல் அக்டோபர் 1ம் தேதி கேரளாவில் உள்ள செருப்புழா என்ற இடத்தில் பிறந்துள்ளார். பிரபல நடிகையான இவர் பெங்களுரில் உள்ள கிறிஸ்ட் யுனிவர்சிட்டியில் வணிகவியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

2 / 6

இவர் முதலில் மலையாள மொழியில் வெளியான இசை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் முதன்முதலாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

3 / 6

இந்நிலையில் 2015ல் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "பிரேமம்".இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் பார்வையாளர்களை ஈர்த்தது.

4 / 6

இதனைத் தொடர்ந்து 2016ல் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையில் அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார்.

5 / 6

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து கவண், பா.பாண்டி, ஜுங்கா,மற்றும் இப்லீஸ் போன்ற பலதிரைப்படங்களில் நடித்து மக்களிடையர் பிரபலமானார். இவருக்குக் கவண் மற்றும் பா.பாண்டி போன்ற திரைப்படங்கள் தமிழில் வெற்றியாக அமைந்தது.

6 / 6

மலையாளம் , தமிழ் போன்ற மொழிகளைத் தவிர 2020ல் கோட்டிகோப்பா 3 என்ற திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலகிலும் அறிமுகமானார். இவர் நடிகை மட்டுமில்லாமல் பிரபல மலையாள பாடகரும் ஆவர் இவர் யூ ப்ரூடஸ் மற்றும் வல்லீம் தொட்டி போன்ற திரைப்படங்களைப் பாடியுள்ளார். தற்போது அதிஷ்டசாலி மற்றும் ஜாலியோ ஜிம்கானா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?