எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர்… மாளவிகா மோகனன் ஓபன் டாக் - Tamil News | Actress Malavika Mohanan about Actor Prabhas | TV9 Tamil

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர்… மாளவிகா மோகனன் ஓபன் டாக்

Updated On: 

03 Dec 2024 20:53 PM

இவரின் நடிப்பில் 2024ல் இயக்குநர் பா.ரஞ்சித் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

1 / 6கேரளா மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் நடிகை மாளவிகா மோகன். இவர் 1993-ம் ஆண்டு கேரளாவிலுள்ள பையனுரில் பிறந்தார். மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு.மோகன் இவரின் தந்தை ஆவார்.

கேரளா மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் நடிகை மாளவிகா மோகன். இவர் 1993-ம் ஆண்டு கேரளாவிலுள்ள பையனுரில் பிறந்தார். மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு.மோகன் இவரின் தந்தை ஆவார்.

2 / 6

மாளவிகா மோகன் 2013-ல் இயக்குநர் அழகப்பன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த படம் பட்டம்போலே. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின் நிர்நாயகம் மற்றும் நாணு மாட்டு வரலக்ஷ்மி போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார்.

3 / 6

மாளவிகா மோகன் தமிழில் 2019ல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தில் பூங்கொடி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகினார்.

4 / 6

இந்த படத்தை அடுத்து 2021-ல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜயுடன் இணைந்து தனித்துவமான நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மாளவிக்கா மோகனன்.

5 / 6

இவரின் நடிப்பில் 2024ல் இயக்குநர் பா.ரஞ்சித் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

6 / 6

இவருக்கு மாஸ்டர், பேட்ட மற்றும் தங்கலன் போன்ற திரைப்படங்கள் தொடர் வெற்றியாக அமைந்தது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகை மாளவிக்கா நடிகர் கார்த்திக் நடிக்கும் சர்தார் 2 மற்றும் தி ராஜா சாப் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நடிகர் பிரபாஸை மிகவும் பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?