விஜய், விக்ரம் பட நடிகை தான் இந்த குழந்தை… யார் தெரியுதா? - Tamil News | Actress Malavika Mohanan Childhood Photo Viral on social media | TV9 Tamil

விஜய், விக்ரம் பட நடிகை தான் இந்த குழந்தை… யார் தெரியுதா?

Published: 

22 Oct 2024 18:33 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

1 / 5சமீபத்தில்

சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

2 / 5

மாளவிகா மோகனன் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை யூ.கே மோகனன் பாலிவுட் படங்களின் பிரபல ஒளிப்பதிவாளர். தாய் பீனா மோகனன். பள்ளிக் கல்லூரிப் படிப்பையெல்லாம் மும்பையில்தான் முடித்துள்ளார். தற்போது குடும்பத்துடன் பூர்வீகமான கேரளாவின் பையூரில் வசித்து வருகிறார்.

3 / 5

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

4 / 5

தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன்ன். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

5 / 5

சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான விக்ரமின் "தங்கலான்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் மாளவிகா.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!