நடிகை மாளவிக்கா மோகன் கேரளா மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவர் 1993ம் ஆண்டு கேரளாவிலுள்ள பையனுரில் பிறந்துள்ளார். இவரின் தந்தை மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு.மோகன் ஆவார்.
இவர் 2013ல் இயக்குநர் அழகப்பன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து பட்டம்போலே என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின் நிர்நாயகம், நாணு மாட்டு வரலக்ஷ்மி போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார்.
இவர் தமிழில் 2019ல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் வெளியான "பேட்ட" என்ற திரைப்படத்தில் பூங்கொடி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகினார்.
இந்த திரைப்படத்தை அடுத்து 2021ல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "மாஸ்டர்" திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜயுடன் இணைந்து தனித்துவமான நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மாளவிக்கா மோகனன்.
இவரின் நடிப்பில் 2024ல் இயக்குநர் பா.ரஞ்சித் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் "ஆர்த்தி" என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இவருக்கு மாஸ்டர், பேட்ட மற்றும் தங்கலன் போன்ற திரைப்படங்கள் தொடர் வெற்றியாக அமைந்தது. இந்த திரைப்படங்களை அடுத்து நடிகை மாளவிக்கா நடிகர் கார்த்திக் நடிக்கும் 'சர்தார் 2' மற்றும் 'தி ராஜா சாப்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.