நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு திருமணமா? பரவிய தகவல்.. அவரே கொடுத்த விளக்கம்! - Tamil News | Actress Meenakshi Chowdhury puts an end to rumors about her marriage | TV9 Tamil

நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு திருமணமா? பரவிய தகவல்.. அவரே கொடுத்த விளக்கம்!

Published: 

22 Nov 2024 18:08 PM

Actress Meenakshi Chaudhary : தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் முன்னை கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் 2018ம் ஆண்டு நடந்த "ஃபெமினா மிஸ் இந்தியா கிராண்ட் இன்டர்நேஷனல்" போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

1 / 52021ம்

2021ம் ஆண்டு இயக்குநர் எஸ்.தர்ஷன் இயக்கத்தில் வெளியான "இச்சாட வாகனமுலு நிலுபரடு" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சுஷாந்த் உடன் னைத்து நடிகையாக அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களாகக் கில்லாடி, தி செகண்ட் கேஸ் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2 / 5

தெலுங்கு திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருந்த இவர் தமிழில் "கொலை" என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து தமிழில் அறிமுகமாகினார். தொடர்ந்து இவர் சிங்கப்பூர் சலூன், கோட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதில் கோட் திரைப்படத்தில் ஸ்ரீ நிதி என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமாகினார்.

3 / 5

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமாகினார். கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

4 / 5

இந்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகர் நாகார்ஜுனாவின் நெருங்கிய சொந்தக்காரருமான நடிகர் சுஷாந்த் என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் பரவிவருகின்ற நிலையில் அந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் வதந்திகள் தொடர்பான அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.

5 / 5

நடிகை மீனாட்சி சவுத்ரி " இந்த தகவல்கள் எப்படிப் பரவியது என்று எனக்குத் தெரியவில்லை, சமூக ஊடகங்களில் நான் கூறுவது உண்மை என்றால், என்னிடம் இருந்து வராத தகவலும் உண்மை இல்லை என்றும் நான் தற்போதுவரை தனிமையில்தான் இருக்கிறேன் திருமணம் என்ற வாழ்க்கைக்குள் நான் நுழையத் தயாராக இல்லை என்று திருமணம் குறித்துப் பரவிவந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!