அந்தப் படத்தில் நடித்தது தவறான முடிவு… இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பேச்சு - Tamil News | | TV9 Tamil

அந்தப் படத்தில் நடித்தது தவறான முடிவு… இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பேச்சு

Updated On: 

16 Oct 2024 12:04 PM

2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நயன்தாரா. 2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நயன்தாரா.

1 / 9பிரபல

பிரபல நடிகரின் நடிப்பில் வெளியான அந்த படத்தில் நான் நடித்தது என் வாழ்வில் எடுத்த மோசமான முடிவு என நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

2 / 9

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியன் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.

3 / 9

2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கரே படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நயன்தாரா.

4 / 9

2005-ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நயன்தாரா.

5 / 9

அதற்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு சந்திரமுகி படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

6 / 9

தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தார் நயன்தாரா.

7 / 9

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கஜினி படத்த்தில் நடித்தது என் வாழ்வில் எடுத்த மோசமான முடிவு என்று நயன்தாரா பேசியது வைரலாகி வருகின்றது.

8 / 9

கதை சொல்லும் போது, என்னுடைய கதாபாத்திரம் எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் படத்தில் அமையவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

9 / 9

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘கஜினி’. 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!