நியூ லுக்கில் நடிகை பார்வதி… வைரலாகும் போட்டோஸ்! - Tamil News | actress parvathy thiruvothu new look photos viral on social media | TV9 Tamil

நியூ லுக்கில் நடிகை பார்வதி… வைரலாகும் போட்டோஸ்!

Published: 

24 Nov 2024 21:05 PM

தொடர்ந்து நல்ல காதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வரும் பார்வதி, சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமிற்கு நாயகியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார் பார்வதி.

1 / 61988ஆம்

1988ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர் நடிகை பார்வதி. பள்ளி காலத்தில் திருவனந்தபுரத்திற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளி படிப்பிற்கு பிறகு பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார்.

2 / 6

டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி அவுட் ஆப் தி சிலபஸ் எனும் படத்தில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் கன்னட திரைப்படமான மிலானா மூலம் ஹீரோயினாக முதன்முதலில் களமிறங்கினார்.

3 / 6

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் 2008ம் ஆண்டு அறிமுகமானார். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

4 / 6

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள் என  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் பார்வதி.

5 / 6

தொடர்ந்து நல்ல காதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வரும் பார்வதி, சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமிற்கு நாயகியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

6 / 6

தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார் பார்வதி. இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் சமீபத்தில் நியூ லுக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!