விஜய், சூர்யா பட நடிகை இந்த சிறுமி…. யார் தெரியுதா? - Tamil News | Actress Pooja Hegde childhood photo viral on social media | TV9 Tamil

விஜய், சூர்யா பட நடிகை இந்த சிறுமி…. யார் தெரியுதா?

Published: 

28 Sep 2024 18:32 PM

தமிழில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார் பூஜா. தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார் பூஜா.

1 / 62010ம்

2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றிய பூஜாவின் புகைப்படங்களை பார்த்து தான் இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தில் பூஜாவை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். படம் தோல்வியை சந்தித்ததால் அதன் பிறகு பூஜா தமிழ் சினிமாவில் காணவில்லை.

2 / 6

2014ம் ஆண்டு வெளியான 'ஓக லைலா கோசம்' தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யா அக்கினேனி ஜோடியானார். அதை தொடர்ந்து ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக 'மொஹன்ஜ தாரோ' படத்தில் நடித்தார். 

3 / 6

தமிழில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார் பூஜா. தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார் பூஜா.

4 / 6

முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் பூஜா ஹெக்டே.

5 / 6

ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ், பிரபாஸுடன் ராதே ஷ்யாம், அகில் அக்கினேனி ஜோடியாக மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், சல்மான் கான் ஜோடியாக கிசி கா பாய் கிசி கி ஜான் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சூர்யாவின் 44 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

6 / 6

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!