நடிகை பூனம் பாஜ்வாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.! - Tamil News | Actress Poonam Bajwa Recent Photos Viral On Social Media | TV9 Tamil

நடிகை பூனம் பாஜ்வாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.!

Published: 

21 Oct 2024 16:20 PM

2000ல் வெளியான திரைப்படங்களை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் எனத் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். இவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

1 / 5நடிகை

நடிகை பூனம் 1985ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி மும்பையில் பிறந்துள்ளார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சார்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே மடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் 2005ல் நடந்த மிஸ் புனே அழகி போட்டியில் முதலிடம் பிடித்துப் பிரபலமானார்.

2 / 5

முன்னணி நடிகையான இவர் 2005ல் இயக்குநர் குச்சுப்புடிவெங்கட் இயக்கத்தில் வெளியான மொடடி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாகத் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பாஸ் என்ற மற்றொரு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

3 / 5

இவர் தமிழில் 2007ல் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இப்பத்தில் நடிகர் பரத்துடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார் . இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று அந்த அளவிற்கு ஓட்டமில்லை.

4 / 5

இதனை தொடர்ந்து வெளியான தேனாவட்டு, கச்சேரி ஆரம்பம் , த்ரோஹி மற்றும் தம்பிக்கோடடை போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் திரைப்படங்களில் நடித்துப் பல ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றார்.

5 / 5

பின் இவருக்குத் தமிழ்த் திரைப்படங்களில் வரவேற்புகளில் குறைந்த நிலையில் கிளாமர் கதாபாத்திரங்களில் திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் 2020ல் தனது இன்ஸ்டாகிராமில் இயக்குநர் சுனில் ரெட்டியுடன் லிவிங் டூ கேதரில் இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். சினிமாவிலிருந்து தற்போது இடைவேளை வீட்டிற்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் ரீசென்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?