இந்த கியூட் பாப்பா கார்த்தி பட நடிகை… யார் தெரியுதா? - Tamil News | Actress Priyamani Childhood photos viral on social media | TV9 Tamil

இந்த கியூட் பாப்பா கார்த்தி பட நடிகை… யார் தெரியுதா?

Published: 

04 Oct 2024 15:53 PM

தற்போது தமிழில் நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் இவர் நடிப்பதை தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 / 8சமீபத்தில்

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பிரியாமணி சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2 / 8

கர்நாடகாவின் பெங்களூருவில் 1984ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர் நடிகை பிரியாமணி. ஆனால், இவரது பூர்வீகம் கேரளாவில் பாலக்காடு ஆகும். பிரியாமணி, தனது பள்ளிப்படிப்பை பெங்களூருவில் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

3 / 8

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியாமணி. கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கண்களால் கைது செய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

4 / 8

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் பெற்றுள்ளார் நடிகை பிரியாமணி.

5 / 8

தமிழுக்கு வருவதற்கு முன்னால் தெலுங்கு, மலையாளம் என தனது அறிமுகத்தை ஏற்கனவே பல மொழிகளில் அவருக்கு புகழ் கொடுத்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த புகழ் போன்று பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை. 

6 / 8

பிரியாமணி ' ராவன் ' மற்றும் ' ரக்த சரித்ரா 2 ' போன்ற பாலிவுட் படங்களில் முன்பே நடித்துள்ளார். ஆனால் அவர் மனோஜ் பாஜ்பாயுடன் 'தி ஃபேமிலி மேன்' வலைத்தொடரில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலம் ஆனார். 

7 / 8

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி தற்பொழுது தமிழில் கொட்டேஷன் கேங் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

8 / 8

இந்த நிலையில் தற்போது தமிழில் நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் இவர் நடிப்பதை தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version