5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா? நடிகை பிரியாமணி காட்டம்

தமிழுக்கு வருவதற்கு முன்னால் தெலுங்கு, மலையாளம் என தனது அறிமுகத்தை ஏற்கனவே பல மொழிகளில் அவருக்கு புகழ் கொடுத்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த புகழ் போன்று பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2024 15:54 PM
கர்நாடகாவின் பெங்களூருவில் 1984ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர் நடிகை பிரியாமணி. ஆனால், இவரது பூர்வீகம் கேரளாவில் பாலக்காடு ஆகும். பிரியாமணி, தனது பள்ளிப்படிப்பை பெங்களூருவில் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

1 / 9
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியாமணி. கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கண்களால் கைது செய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

2 / 9
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் பெற்றுள்ளார் நடிகை பிரியாமணி.

3 / 9
தமிழுக்கு வருவதற்கு முன்னால் தெலுங்கு, மலையாளம் என தனது அறிமுகத்தை ஏற்கனவே பல மொழிகளில் அவருக்கு புகழ் கொடுத்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த புகழ் போன்று பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை.

தமிழுக்கு வருவதற்கு முன்னால் தெலுங்கு, மலையாளம் என தனது அறிமுகத்தை ஏற்கனவே பல மொழிகளில் அவருக்கு புகழ் கொடுத்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த புகழ் போன்று பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை.

4 / 9
பிரியாமணி ' ராவன் ' மற்றும் ' ரக்த சரித்ரா 2 ' போன்ற பாலிவுட் படங்களில் முன்பே நடித்துள்ளார். ஆனால் அவர் மனோஜ் பாஜ்பாயுடன் 'தி ஃபேமிலி மேன்' வலைத்தொடரில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலம் ஆனார்.

5 / 9
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி தற்பொழுது தமிழில் கொட்டேஷன் கேங் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

6 / 9
இந்த நிலையில் தற்போது தமிழில் நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் இவர் நடிப்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 / 9
பிரியாமணி இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டதை அடுத்து அவரை பலரும் விமர்சித்தார்கள். தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் அவர், எனது குழந்தைகள் பயங்கரவாதிகளாக வருவார்கள் என்ற கமெண்ட்ஸ்களை பார்த்தேன். மத வேறுபாடின்றி நான் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அதற்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என புரியவில்லை.

8 / 9
ஈத் பண்டிகைக்கு ஒரு போஸ்ட் போட்டேன். உடனே நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா?.. அப்படியே இருந்தாலும் அது என் முடிவு. திருமணத்துக்கு முன்பே நான் எனது கணவரிடம், 'ஹிந்துவாக பிறந்த நான் எப்போது எனது நம்பிக்கையை பின்பற்றுவேன் என்றுதான் சொன்னேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.

9 / 9
Latest Stories