இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் கல்யாண போட்டோஸ் - Tamil News | Actress Ramya Pandian and Lovel Dhawan wedding photos viral on social media | TV9 Tamil

இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் கல்யாண போட்டோஸ்

Published: 

09 Nov 2024 20:28 PM

Ramya Pandian: கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்களுக்கு நேற்று இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றது. இந்தப் திருமணப் புகைப்படங்களை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 / 6பிரபல

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரம்யா பாண்டியன்.

2 / 6

அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான 'குக் வித் கோமாளி' பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

3 / 6

அதனை தொடர்ந்து தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.

4 / 6

இவருக்கு இணையத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமின் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றது. தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

5 / 6

இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது.

6 / 6

இந்த நிலையில் இவர்களுக்கு நேற்று இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றது. இந்தப் திருமணப் புகைப்படங்களை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?