திருமணத்திற்கு தயாரான நடிகை ரம்யா பாண்டியன்… மாப்பிள்ளை யார் தெரியுமா? - Tamil News | Actress Ramya Pandian to marry Yoga instructor Lovel Dhawan | TV9 Tamil

திருமணத்திற்கு தயாரான நடிகை ரம்யா பாண்டியன்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

Published: 

21 Oct 2024 11:32 AM

தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.

1 / 6பிரபல

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரம்யா பாண்டியன்.

2 / 6

அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான 'குக் வித் கோமாளி' பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

3 / 6

அதனை தொடர்ந்து தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.

4 / 6

இவருக்கு இணையத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமின் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றது. தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

5 / 6

இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது.

6 / 6

இருவருக்கும் அவரவர் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் வரும் நவம்பர் 8-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது. நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?