நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? - Tamil News | Actress Ramya Pandiyan Marriage Photos Viral On Social Media | TV9 Tamil

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Published: 

08 Nov 2024 19:01 PM

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ்த் திரைப்படங்களில் நடிகையாக வலம் வந்த இவர் தற்போது லோவல் தவானை நீண்ட நாளாகக் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளார்.

1 / 5நடிகை

நடிகை ரம்யா பாண்டியன் 1900ம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர். முதலில் பாயோ மெடிக்கல் துறையில் படித்துவந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். முதலில் குறும்படங்களில் நடித்து திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பின் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

2 / 5

பின் 2016ம் ஆண்டு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து சினிமாவில் அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனியுடன் இணைத்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.

3 / 5

இந்த திரைப்படங்களில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்காததால் குக் வித் கோமாளியின் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார் இதம் மூலமாகத் தமிழ் மக்களிடையே அதிகம் பிரபலமான இவர் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 பங்கு பெற்று 2வது ரன்னர் அப் ஆனார்.

4 / 5

இதன் மூலமாகத் தமிழ் மக்களிடையே பிரபலமான இவர் 2021ம் ஆண்டு இயக்குநர் அரிசில் முத்து இயக்கத்தில் சூர்யாவின் 2டிஎண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பிலும் உருவான "ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்" எனத் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது.

5 / 5

தொடர்ந்து முகிலன் மற்றும் ஆக்ஷிடேண்டில் ஃபார்மர் அண்ட் கோ போன்ற வெப் தொடர்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக லோவல் தவான் என்பவர் காதலித்து வந்த நிலையில் இன்று ரிஷிகோஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதிக்கரையில் திருமணம் செய்துள்ளனர். நெருங்கிய உறவினர்களுடன் சிம்பிளாக நடந்துள்ள திருமணத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?
சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!