5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புஷ்பா 2 சூப்பர் ஹிட்… சம்பளத்தில் டாப்புக்கு சென்ற ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna : தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவரின் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிய நிலையில் பயங்கர வெற்றி பெற்றுள்ளது.

barath-murugan
Barath Murugan | Published: 11 Dec 2024 19:27 PM
திரைப்படங்களில் நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் அதிக வசூல் செய்து, பின் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில் தமிழ்த் திரைப்படங்களில் சோலோ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக  இருந்துவருபவர் நயன்தாரா. இந்நிலையில் அவரின் சம்பளத்தை பீட் செய்து தற்போது நடிகை ராஷ்மிகா சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

1 / 5
கன்னட சினிமாவின் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ராஷ்மிகா. தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாகப்  பிரபலமான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகப் பல படங்களில் நடித்துள்ளார்.

2 / 5
இந்நிலையில் தற்போது இவர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஆறு  தினங்களில்  சுமார் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா சுமார் ரூ 8 கோடி முதலில் பெற்றார் எனவும் பின் அவருக்கு 12 கோடிகள் வரை சம்பளம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3 / 5
புஷ்பா பாகம் 1ல் நடிப்பதற்காக ராஷ்மிகா ரூ 3 கோடிகள் சம்பளம் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது புஷ்பா 2 ரூ 12 கோடி வரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகிய இருவரும் சுமார் 12 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ள நிலையில், தற்போது அவர்களுக்குப் போட்டியாக நடிகை ராஷ்மிகா சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

4 / 5
இந்நிலையில் புஷ்பா 2 வெற்றியினை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ 16 கோடியாக உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா குபேரா, சிக்கந்தர் மற்றும் தி கேர்ள்ஃபிரென்ட் போன்றபடங்களில் நடித்துவருகிறார். இப்படத்தினை அடுத்தாக புஷ்பா 3 மற்றும் அனிமல் 2 போன்ற  திரைப்படங்களுக்கு அதிக சம்பளத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Latest Stories