புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா செய்த செயல்… வைரலாகும் போட்டோஸ் - Tamil News | Actress Rashmika Mandanna promotion Pushpa 2 in different ways | TV9 Tamil

புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா செய்த செயல்… வைரலாகும் போட்டோஸ்

Published: 

04 Dec 2024 12:09 PM

தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

1 / 6கடந்த 2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்கிற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவிற்கு கிடைத்தது. இதற்கு முன்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில்  நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அதனை நிராகரித்தார் நடிகை ரஷ்மிகா.

கடந்த 2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்கிற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவிற்கு கிடைத்தது. இதற்கு முன்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில்  நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அதனை நிராகரித்தார் நடிகை ரஷ்மிகா.

2 / 6

தன்னுடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது நேஷ்னல் கிரஷ் என்பதுதான்.

3 / 6

பான் இந்திய நடிகையாக தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

4 / 6

இதனால் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் என்பதை விட இதற்கு முன்னதாக தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலமாக தெலுங்கு மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

5 / 6

தொடர்ச்சியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா, தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

6 / 6

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தில் நடித்துள்ள நிலையில் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை புரமோட் செய்யும் விதமாக புஷ்பா படத்தின் பெயர் பொரிக்கப்பட்ட புடவையை கட்டி போட்டோஸ் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?