Actress Ritika Singh : குத்துச்சண்டை டூ சினிமா.. நடிகை ரித்திகாசிங் சினிமா பயணம் - Tamil News | Actress Ritika Singh is celebrating her 30th birthday | TV9 Tamil

Actress Ritika Singh : குத்துச்சண்டை டூ சினிமா.. நடிகை ரித்திகாசிங் சினிமா பயணம்

Published: 

16 Dec 2024 19:01 PM

Ritika Singh Birthday : தென்னிந்தியத் திரைப்பட நடிகைகளில் தனக்கென தனித்திறமையை உருவாக்கி பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரித்திகா சிங். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இவர் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரின் சினிமா பயணம் குறித்து பார்க்கலாம்

1 / 10நடிகை ரித்திகா சிங் 1994ம் ஆண்டு  டிசம்பர் 16ம் தேதியில் மும்பையில் பிறந்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த தற்காப்புக்கலை வீராங்கனையும் ஆவார். சிறுவயதிலிருந்து விளையாட்டின் மீது முழு ஆர்வம் கொண்ட இவர் சிறந்த பாக்சிங் வீராங்கனை ஆவார்.

நடிகை ரித்திகா சிங் 1994ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதியில் மும்பையில் பிறந்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த தற்காப்புக்கலை வீராங்கனையும் ஆவார். சிறுவயதிலிருந்து விளையாட்டின் மீது முழு ஆர்வம் கொண்ட இவர் சிறந்த பாக்சிங் வீராங்கனை ஆவார்.

2 / 10

இவர் 2009ம் ஆண்டில் நடந்த ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதித்துவமாக "சூப்பர் ஃபைட் லீக்" என்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதை அடுத்தாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான "இறுதிச் சுற்று" திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பின் நடிகையாக அறிமுகமாகினார்.

3 / 10

நடிகர் மாதவன் முன்னணி கதாநாயகனாக நடித்த இந்த இறுதிச் சுற்று திரைப்படத்திற்காக உண்மையான பாக்சிங் கதாபாத்திரம் தேவைப்பட்ட நிலையில், மும்பையில் சிறந்த பாக்ஸர் போட்டியாளராக விளங்கிய நடிகை ரித்திகா சிங் இப்படத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார்.

4 / 10

ஆரம்பத்தில் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் முதல் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு முதல் திரைப்படம் பயங்கர வெற்றியாக அமைந்தது. பின் விளையாட்டைத் தொடர்ந்தும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய இவர் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், மாதவன், விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் மற்றும் விஜய் ஆண்டனி எனப் பல நடிகர்களின் படங்களில் முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.

5 / 10

சுதா கொங்காராவின் இறுதிச் சுற்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரித்திகா சிங்கிற்கு அடுத்த பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படம். இயக்குநர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக அறிமுகமாகிய இப்படத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் எனப் பலரும் நடித்திருந்தனர்.

6 / 10

இந்த திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி பெரும் வரவேற்பைப் பெற்று இவருக்கு பாரும் வெற்றிப்படமாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் நடிகையாக அறிமுகமான இவர் குரு, நீவேவரோ போன்ற திரைப்படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமானார்.

7 / 10

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வெற்றியைத் தொடர்ந்து இவர் 2023ம் ஆண்டில் பிரபல இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் "இன்கார்" என்ற படத்தில் நடித்து இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு மலையாளம் எனப் பல மொழி சினிமாவில் அசத்திவரும் இவர் ஸ்டோரி ஆப் திங் மற்றும் பெஞ்ச் லாய் என்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 / 10

நடிகை ரித்திகா சிங்கின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் கொலை, மழை பிடிக்காத மனிதன் மற்றும் வேட்டையன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்திலும் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பிலும் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தின் மூலம் ஆக்ஷ்ன் கதாபாத்திரங்களும் இவருக்குப் பொருந்தும் என நிரூபித்திருந்தார்.

9 / 10

வேட்டையை திரைப்படம் பெரும் வெற்றி பெற்று உலகளாவிய மொத்த வசூலில் சுமார் ரூ 260 கோடிகளை வசூல் செய்து பிளாக் பஸ்டர் வெற்றியாக அமைந்தது. இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர் தற்போது இயக்குநர் செல்வா இயக்கத்தில் "வணங்காமுடி" என்ற திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியீட்டிற்குத் தயாராகிவரும் இப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 / 10

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது 30-வது வயது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். இவருக்குப் பல நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீராங்கனையாக இருந்து பின் நடிகையாகப் பிரபலமான இவருக்குத் தமிழ் மட்டுமில்லாமல் ஆல் ஓவர் இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம்.

இணையத்தை கலக்கும் கீர்த்தியின் கல்யாண கொண்டாட்ட போட்டோஸ்
கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்
நடிகை அதுல்யா ரவி பற்றிய சுவாரஸ்ய தகவல்!
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமண ஆல்பம்!