தனுஷ் பட நாயகி தான் இந்த சிறுமி… யார் தெரியுதா? - Tamil News | Actress Sai Pallavi Childhood photos viral on social media | TV9 Tamil

தனுஷ் பட நாயகி தான் இந்த சிறுமி… யார் தெரியுதா?

Published: 

15 Aug 2024 11:46 AM

Actress Sai Pallavi: சமீபத்தில் இயக்குநர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார். சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 / 7தமிழ்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் கங்கனா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான  தாம் தூம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி.

2 / 7

நடிகை சாய் பல்லவியின் சொந்த ஊர் கோத்தகிரி. அங்கு பிறந்த படுகர் இனத்தை சேர்ந்தவர் இவர் என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.

3 / 7

இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

4 / 7

வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி. குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

5 / 7

மலையாளத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார்.

6 / 7

சமீபத்தில் இயக்குநர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.

7 / 7

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?
பட்ஜெட்டில் பார்க்கக்கூடிய உலக நாடுகள் என்னென்ன தெரியுமா?
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க என்ன செய்யலாம்?