வைரலான வீடியோ… அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி! - Tamil News | Actress Sai Pallavi Talks about viral video | TV9 Tamil

வைரலான வீடியோ… அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி!

Published: 

25 Oct 2024 14:19 PM

சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1 / 6தமிழ்

தமிழ் சினிமாவில் தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி. கோத்தகிரியில் பிறந்த படுகர் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.

2 / 6

இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி. குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

3 / 6

பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார். சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.

4 / 6

இந்த நிலையில் தற்போது சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 6

படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. அப்போது பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி தான் ஏன் கிளாமராக சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்.

6 / 6

அந்த நடனத்திற்கு கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடினால் தான் சரியாக இருக்கும் என ஆடியிருந்தேன். படம் நடித்த பிறகு பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என சாய் பல்லவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!
குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்க டிப்ஸ்!
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!