படப்பிடிப்பில் சமந்தாவிற்கு நடந்த சோகம்… நடிகர் விளக்கம்! - Tamil News | Actress Samantha fainted during web series Citadel Honey Bunny shooting | TV9 Tamil

படப்பிடிப்பில் சமந்தாவிற்கு நடந்த சோகம்… நடிகர் விளக்கம்!

Published: 

12 Nov 2024 15:04 PM

Samantha: சிட்டாடல் படப்பிடிப்பில் நடிகை சம்ந்தா மயங்கி விழுந்தது குறித்து நடிகர் வருண் தவான் பேசியுள்ளார். அதில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடித்துக்கொண்டிருந்த போது சமந்தா மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை பார்த்த வருண் பதட்டம் அடைந்ததாகவும், படப்பிடிப்பை ரத்து செய்துவிடலாம் என்றேன் ஆனால் சிறிது நேரத்தில் சமந்தா சகஜ நிலைக்கு வந்துவிடுவார் பதட்டம் வேண்டாம் என்று இயக்குநர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 / 7பானா

பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா. அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார் சமந்தா. 

2 / 7

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர்.

3 / 7

இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.

4 / 7

சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக நடித்து வந்தார் சமந்தா. பின்னர் தனக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 

5 / 7

திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிகிச்சையின் போதும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார் சமந்தா. இந்த நிலையில் சிகிச்சைகள் முடிந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க தொடங்கியுள்ளனர்.

6 / 7

இந்த நிலையில் சிட்டாடல் படப்பிடிப்பில் நடிகை சம்ந்தா மயங்கி விழுந்தது குறித்து நடிகர் வருண் தவான் பேசியுள்ளார். அதில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடித்துக்கொண்டிருந்த போது சமந்தா மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

7 / 7

இதனை பார்த்த வருண் பதட்டம் அடைந்ததாகவும், படப்பிடிப்பை ரத்து செய்துவிடலாம் என்றேன் ஆனால் சிறிது நேரத்தில் சமந்தா சகஜ நிலைக்கு வந்துவிடுவார் பதட்டம் வேண்டாம் என்று இயக்குநர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?