இந்த படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! - Tamil News | Actress Shivada Childhood Photo Viral On Internet | TV9 Tamil

இந்த படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Published: 

04 Oct 2024 11:18 AM

Actress Shivadha : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் புதிய நடிகைகளாக அறிமுகமான நடிகைகளும் மக்கள் மத்தியில் தனது நடிப்பின் திறமையால் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் பிரபலமாகக் கருதப்படும் நடிகை சிவதாவின் பழைய புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 / 5தற்போது

தற்போது தமிழ் சினிமாவில் பல பிரபலங்களைப் பழைய புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அந்த வகையில் தமிழ் நடிகை சிவதாவின் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 / 5

நடிகை சிவதா என்று பெயரால் சினிமாவில் அறியப்பட்டாலும் இவரின் உண்மையான பெயர் ஸ்ரீ லேகா கே.வி ஆகும். இவர் 1986 ஏப்ரல் 23ல் தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும் இவர் முழுவதாக வளர்ந்து கேரளாவில் தான். இவர் திரைப்படங்களைச் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவருக்குப் பெருமளவில் வரவேற்பு இல்லாத காரணத்தால் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலைபார்த்துள்ளார்.

3 / 5

பின் 2011ல் கேரளா இயக்குநர் பாசில் இயக்கத்தில் "லிவிங் டூ கெதர்" என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து தமிழில் 2014ல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

4 / 5

பின் 2015ல் தனது நீண்டநாள் காதலனான மலையாள இயக்குநர் முரளி கிருஷ்ணா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணமாகி இவருக்குக் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

5 / 5

தமிழில் சீரோ, அதே கண்கள்,மாறா, நித்தம் ஒரு வானம் மற்றும் தீரா காதல் போன்ற திரைப்படங்களை நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் 2024ல் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version