தமிழ் சினிமாவை கலக்கியவர்..! இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா? - Tamil News | Actress Shriya Saran Childhood Photos Viral On Social Media | TV9 Tamil

தமிழ் சினிமாவை கலக்கியவர்..! இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?

Published: 

23 Oct 2024 22:24 PM

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியினால் சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல நடிகை ஆவார். தெலுங்கு திரைப்படங்களின் மூலம் அறிமுகமானாலும், தமிழ் சினிமா இவருக்குப் பிரபல நடிகை என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. விஜய், தனுஷ் விக்ரம் மற்றும் ஜெயம் ரவியுடன் நடித்த இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?

1 / 6சமீபகாலமாக

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் சிறுமி யார் தெரியுமா? நடனத்தில் வளவு நெளிவுடன் ஆடுபவர் இவர் இப்போதாவது இவர் யார் என்று ஞாபகம் வருகிறதா.. இது வேற யாரும் இல்லை நடிகை ஷ்ரேயா சரண் தான்.

2 / 6

நடிகை ஷ்ரேயா சரண் 1981ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தேராதூன் என்ற இடத்தில் பிறந்தார். ஷ்ரேயா பிரபல நடிகை மட்டும் இல்லை. அவர் கதகளி மற்றும் பிரபல ராஜஸ்தானி நடனக் கலைஞராவார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கல்லூரியில் படிக்கும் போது குறும்படங்களில் நடித்து பிரபலமானார்.

3 / 6

பின் இவர் 2001ல் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான "இஷ்டம்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் முதன்முறையாகத் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோ படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இவர் தெலுங்கில் இளம் ஹீரோக்கள் முதல் சீனியர் ஹீரோக்கள் வரை அனைவருக்கும் ஜோடியாக நடித்தார்

4 / 6

தமிழ் சினிமாவில் இவர் 2003ல் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி என பலருக்கும் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஷ்ரேயா.

5 / 6

தமிழில் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக மழை,சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், குட்டி மற்றும் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்கள் அமைந்தது. இத்திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தது.

6 / 6

பின் இவர் 2018 ஆம் ஆண்டு பிரபல ரஷ்ய தொழிலதிபரான ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவர் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் தற்போது மாடலின் துறையில் முழுவதுமாக இறங்கியுள்ளார். எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
நடிகை அனு இம்மானுவேல் பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!
இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?