5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிரிப்பழகி சினேகாவிற்கு ஹேப்பி பர்த்டே…!

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Oct 2024 11:50 AM
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

1 / 6
2000-களின் ஆரம்பங்களில் சிம்ரன்,ரம்பா,ஜோதிகா என வடமாநில நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொழுது தென்னிந்தியாவில் பிறந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் தன் திறமையான நடிப்பினால் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சினேகா.

2 / 6
மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது. முதல் படத்திலேயே தன் அண்டைவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் முதிர்ச்சியான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா.

3 / 6
2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

4 / 6
நடிகை சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, பிரசாந்த், தனுஷ் என தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

5 / 6
சமீபத்தில் நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அப்பா விஜக்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சினேகாவிற்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

6 / 6
Latest Stories