முன்னணி நடிகர்களின் நாயகி இந்த சிறுமி… யார் தெரியுதா? - Tamil News | actress sneha childhood photos viral on social media | TV9 Tamil

முன்னணி நடிகர்களின் நாயகி இந்த சிறுமி… யார் தெரியுதா?

Published: 

07 Sep 2024 18:51 PM

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. நடிகை சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, பிரசாந்த், தனுஷ் என தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

1 / 6தெலுங்கைத்

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

2 / 6

2000-களின் ஆரம்பங்களில் சிம்ரன்,ரம்பா,ஜோதிகா என வடமாநில நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொழுது தென்னிந்தியாவில் பிறந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் தன் திறமையான நடிப்பினால் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சினேகா.

3 / 6

மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது. முதல் படத்திலேயே தன் அண்டைவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் முதிர்ச்சியான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா.

4 / 6

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

5 / 6

நடிகை சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, பிரசாந்த், தனுஷ் என தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

6 / 6

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை சினேகாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version