எனக்கு இந்த நடிகரைதான் மிகவும் பிடிக்கும் – வெளிப்படையாக பேசிய சினேகா - Tamil News | Actress Sneha said her favourite hero is ajith kumar | TV9 Tamil

எனக்கு இந்த நடிகரைதான் மிகவும் பிடிக்கும் – வெளிப்படையாக பேசிய சினேகா

Published: 

28 Oct 2024 12:36 PM

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

1 / 6தெலுங்கைத்

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

2 / 6

2000-களின் ஆரம்பங்களில் சிம்ரன்,ரம்பா,ஜோதிகா என வடமாநில நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பொழுது தென்னிந்தியாவில் பிறந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் தன் திறமையான நடிப்பினால் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சினேகா.

3 / 6

மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது. முதல் படத்திலேயே தன் அண்டைவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் முதிர்ச்சியான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா.

4 / 6

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

5 / 6

நடிகை சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, பிரசாந்த், தனுஷ் என தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

6 / 6

சமீபத்தில் நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அப்பா விஜக்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சினேகாவிடம் அவருக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவருக்கு அஜித் தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!
உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது