கோலிவுட் சினிமாவின் டாப் நடிகை தான் இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா? - Tamil News | Actress Trisha Krishnan childhood photo viral on social media | TV9 Tamil

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகை தான் இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா?

Published: 

25 Sep 2024 17:38 PM

தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்திருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் திரிஷா தான். த்ரிஷா மட்டும் தான் கடந்த 2 தசாப்தங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகையாவார்.

1 / 61983

1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்தார். சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், எத்திராஜ் கல்லூரியில் பயின்றார். அப்போது மாடலிங்கில் ஆர்வம் உண்டாகவே அதில் தீவிரமாக களமிறங்கினார். இதன் விளைவாக 1999 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

2 / 6

நடிகர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அதன் பிறகு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நாயகியாக உருவெடுத்தார். அதன் பின் வெளியான மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை மற்றும் எனக்கு 20 உனக்கு 18 போன்ற திரைப்படங்கள் திரிஷாவின் புகழை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரப்பியது.

3 / 6

விக்ரம் உடன் சாமி, விஜய் உடன் கில்லி, மாதவன் உடன் லேசா லேசா, திருப்பாச்சி, சூர்யாவுடன் ஆறு, சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகியாக முன்னேறினார். அதன் பிறகு ரசிகர்களால் சவுத் குயின் என அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தான் த்ரிஷா.

4 / 6

முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக கலக்கி வருகின்றார் த்ரிஷா.

5 / 6

தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்திருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் திரிஷா தான். த்ரிஷா மட்டும் தான் கடந்த 2 தசாப்தங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகையாவார்.

6 / 6

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
Exit mobile version