AFG vs NZ Test: 91 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை.. ஒரு பந்து கூட வீசாமல் முடிந்த டெஸ்ட் போட்டி! - Tamil News | Afghanistan vs New Zealand Only Test Abandoned Record it 1st Time In 91 Years | TV9 Tamil

AFG vs NZ Test: 91 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை.. ஒரு பந்து கூட வீசாமல் முடிந்த டெஸ்ட் போட்டி!

Published: 

13 Sep 2024 21:04 PM

Afghanistan vs New Zealand: ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், 91 ஆண்டுகால சாதனை தகர்க்கப்பட்டது. பந்து வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட 21வது நூற்றாண்டின் முதல் டெஸ்ட் இதுவாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்டாவது டெஸ்ட் போட்டி ஆகும். இதற்கு முன், 20ம் நூற்றாண்டில் தான், இப்படி ஒரு டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியிலும் நியூசிலாந்து அணியே இடம் பெற்றிருந்தது.

1 / 6ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், 91 ஆண்டுகால சாதனை தகர்க்கப்பட்டது. பந்து வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட 21வது நூற்றாண்டின் முதல் டெஸ்ட் இதுவாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்டாவது டெஸ்ட் போட்டி ஆகும்.

2 / 6

இதற்கு முன், 20ம் நூற்றாண்டில் தான், இப்படி ஒரு டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியிலும் நியூசிலாந்து அணியே இடம் பெற்றிருந்தது. கடந்த 1998ல் இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

3 / 6

செப்டம்பர் 09 முதல் 13 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. இதில் டாஸும் போடாமல், பந்தும் போடாமலும் போட்டி ரத்து செய்யப்பட்டது.

4 / 6

கடந்த 91 ஆண்டுகள் மற்றும் 730 டெஸ்ட் போட்டிகளில், ஆசியாவில் மழையால் ரத்து செய்யப்பட்ட முதல் போட்டி ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியாகும். நொய்டாவில் பெய்த மழையால் ஆடுகளம் மோசமானதுடன் அதனை சரிசெய்யவும் போதிய உபகரணங்கள் இல்லாததால் இந்த போட்டி கைவிடப்பட்டது.

5 / 6

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

6 / 6

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ளது. இது தவிர, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 18 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?