Ajinkya Rahane: சதமடித்து கம் பேக்! மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குகிறாரா ரஹானே..? - Tamil News | Ajinkya Rahane scored a century for Leicestershire in the County Championship | TV9 Tamil

Ajinkya Rahane: சதமடித்து கம் பேக்! மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குகிறாரா ரஹானே..?

Published: 

01 Sep 2024 21:56 PM

Indian Cricket Team: இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இதுவரை இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரஹானே இதுவரை இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் உதவியுடன் 5077 ரன்கள் குவித்துள்ளார்.

1 / 7ஒரு

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் நீங்கா இடம் பிடித்திருந்த அஜிங்க்யா ரஹானே, பார்ம் அவுட் காரணமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்தநிலையில், எப்போதும் ரஹானே இந்திய அணியில் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

2 / 7

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 2024 போட்டியில் லெய்செஸ்டர் அணியில் விளையாடும் ரஹானே, 192 பந்துகளை சந்தித்து 102 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தால் லெய்செஸ்டர் அணி 300 ரன்களை நெருங்கியது.

3 / 7

இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், ரஹானே சதம் அடித்தார். இதன்மூலம், ரஹானே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

4 / 7

கவுண்டி சாம்பியன்ஷிப்பில், கார்டிப்பில் லீசெஸ்டர்ஷைர் மற்றும் கிளாமோர்கன் இடையே ஒரு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது, ​​ரஹானே லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸின் போது நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.

5 / 7

இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே 192 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 102 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, ட்விட்டர் பக்கத்தில் ரஹானே டிடெண்டாக தொடங்கினார்.

6 / 7

இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இதுவரை இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

7 / 7

ரஹானே இதுவரை இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் உதவியுடன் 5077 ரன்கள் குவித்துள்ளார். ரஹானேவின் சிறந்த டெஸ்ட் ஸ்கோர் 188 ரன்கள் ஆகும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!