5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்த நாடுகளில் மது விற்பனைக்கு கடுமையான ரூல்ஸ்.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

Countries which ban alcohol: உலகம் முழுவதும் மது அருந்துபவர்கள் இருக்கிறார்கள். மதுவால் குடும்ப வன்முறை, சமூக சீர்கேடு, சாலை விபத்துக்கள் போன்ற ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல நாடுகளின் அரசு முயற்சி செய்து வருகிறது.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 27 Nov 2024 09:45 AM
சவுதி அரேபியாவில் மதுபானங்கள் முற்றிலும் தடை  செய்யப்பட்டதாகும். இந்த நாட்டில் மது விற்பது, குடிப்பது மற்றும் வைத்திருப்பது என எல்லாமும் குற்றமாகும். இதை மீறினால் சவுக்கடி முதல் சிறை தண்டனை வரை பெற நேரிடும். விமான நிலையங்களில் கூட கடுமையான சோதனைகளுக்குப் பிறகு பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கும் எந்தவித விதி விலக்கும் இல்லை.

1 / 5
1964 ஆம் ஆண்டு முதல் குவைத்தில் மது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மது கடத்தலில் ஈடுபட்டாலோ மது விற்பனை செய்தாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும். வெளிநாட்டவர்கள் கூட இந்த நாட்டிற்குள் மது கொண்டு வர அனுமதி இல்லை. இதை மீறினால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

2 / 5
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் துபாய் போன்ற சில நகரங்களில் மட்டும் உரிமம் பெற்று விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மதுக்களை இஸ்லாமியர்கள் வாங்க இயலாது. மேலும் மற்ற இடங்களில் மது தடை முழுவதுமாக உள்ளது. அதேபோல் பொது இடங்களில் குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

3 / 5
இஸ்லாமியப் புரட்சிக்கு பின் ஈரானில் மிகக் கடுமையான மது தடை அமல்படுத்தப்பட்டது. மது தயாரிப்பது, விற்பது, அருந்துவது என எல்லாவற்றுக்கும் சிறை தண்டனை கொடுக்கப்படும்.

4 / 5
இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் முழு மது தடை அமலில் உள்ளது. காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் 1960 ஆம் ஆண்டு முதலில் மது தடை அமலில் உள்ளது. அதைப்போல் பழங்குடியினரின் பாரம்பரியத்தின் அடிப்படையில் நாகலாந்து மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.

5 / 5
Latest Stories