Benefits of Hibiscus: மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் மகத்துவம்.. செம்பருத்தியின் அற்புத பலன்கள்..! - Tamil News | All You Need to Know About Hibiscus; health tips in tamil | TV9 Tamil

Benefits of Hibiscus: மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் மகத்துவம்.. செம்பருத்தியின் அற்புத பலன்கள்..!

Published: 

08 Oct 2024 21:14 PM

Health Tips: பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை நீக்க செம்பருத்தி மிகவும் உதவியாக இருக்கும். செம்பருத்தி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை சமநிலையை வைத்திருக்க உதவி செய்யும். உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும். மாதவிடாய் சுழற்சியில் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும். எனவே, செம்பருத்தி இவற்றை சரி செய்யும்.

1 / 6உடலில்

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது. செம்பருத்தி பூவில் அதிகளவில் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள இரத்த சோகை பிரச்சனையை நீக்குகிறது. இரும்புச்சத்து வேண்டும் என்பவர்கள் செம்பருத்தி பூவின் மொட்டுகளை அரைத்து சாறு போன்றும் எடுத்துக்கொள்ளலாம்.

2 / 6

முதுமையை தடுக்க செம்பருத்தி மிகவும் உதவும். உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்கலை அகற்றுவதற்கு செம்பருத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பயன்பாடு வயதான செயல்முறையை குறைப்பது மட்டுமல்லாமல், பெண்களை அழகாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவி செய்யும்.

3 / 6

அடிக்கடி பசிப்பவர்களுக்கு செம்பருத்திய உட்கொள்வது நல்ல பலனை தரும். அந்தவகையில், செம்பருத்தி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் டீ மிகவும் ஆற்றல் வாய்ந்தது. இதை உட்கொள்பவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. மேலும், செரிமானமும் மேம்படும். செம்பருத்தி தேவையற்ற கொழுப்பை நீக்குவதுடன், எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

4 / 6

செம்பருத்தில் இலைகளில் வைட்டமின் சி அதிகளவில் உள்லது. இது சளி தொல்லையை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், இருமலை குணப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. மேலும், செம்பருத்தி தொண்டைக்கு இதமளிப்பதுடன் உடலில் வைட்டமின் சி அளவையும் அதிகரிக்க செய்கிறது.

5 / 6

செம்பருத்தியில் ஏற்கனவே சொன்னதுபோல் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. அதே நேரத்தில் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளாலும் நிறைந்துள்ளது. இது முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவது மட்டுமல்லாமல், முகப்பருவையும் குணப்படுத்துகிறது. மேலும், செம்பருத்தி முகத்தில் உள்ள வறட்சியை நீக்குவதுடன், வீக்கத்தையும் மறைய செய்யும்.

6 / 6

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை நீக்க செம்பருத்தி மிகவும் உதவியாக இருக்கும். செம்பருத்தி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை சமநிலையை வைத்திருக்க உதவி செய்யும். உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும். மாதவிடாய் சுழற்சியில் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும். எனவே, செம்பருத்தி இவற்றை சரி செய்யும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!