இன்ஸ்டாவில் அல்லு அர்ஜுன் ஃபாலோ செய்வது அந்த ஒருவரை மட்டும் தான்… யார் தெரியுமா? - Tamil News | Allu Arjun follows single person in instagram check who is this special person | TV9 Tamil

இன்ஸ்டாவில் அல்லு அர்ஜுன் ஃபாலோ செய்வது அந்த ஒருவரை மட்டும் தான்… யார் தெரியுமா?

Published: 

14 Dec 2024 18:14 PM

இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தின் மூலமாக பான் இந்திய நடிகராக மாறிய அல்லு அர்ஜுன் சர்வதேச அளவில் பிரபலமானார். இவரது நடிப்பில் தற்போது புஷ்பா 2 படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலி தெரிக்கவிடுகிறது. தற்போது வரை 1000 கோடிகளை கடந்து வசூலித்து வருகிறது.

1 / 7நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை அல்லு அரவிந்த் ரோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர். டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லு அரவிந்திற்கு மாமா முறை. இப்படி பிறந்ததே திரையுல குடும்பத்தில் என்றாலும் தனக்கான ஒரு இடத்தை நடிப்புத் துறையில் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை அல்லு அரவிந்த் ரோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர். டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லு அரவிந்திற்கு மாமா முறை. இப்படி பிறந்ததே திரையுல குடும்பத்தில் என்றாலும் தனக்கான ஒரு இடத்தை நடிப்புத் துறையில் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

2 / 7

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். தனது இருபதாவது வயதில் அவர் குடும்பத்துடன் ஹைதரபாத்தில் செட்டிலாகியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடிகர் அல்லு அர்ஜுன் தோன்றி இருந்தாலும் நாயகன் என்ற அறிமுகத்தை கொடுத்தது 2002ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' படம் தான். 

3 / 7

முதல் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அல்லு அர்ஜுனின் இரண்டாவது படமான ஆர்யா அவருரது சினிமா வாழ்க்கைக்கு உந்துதலாக அமைந்தது. இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரன் இயக்கியிருந்தார். தனது துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார் அல்லு அர்ஜுன்.

4 / 7

நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு தேர்ந்த நடன கலைஞராகவும் இருக்கிறார். மிகவும் கடினமான டான்ஸ் ஸ்டெப்ஸ்களை கூட அசால்ட்டாக ஆடக்கூடியவர் என்ற பெயர் இவருக்கு சினிமா வட்டாரங்களிடையே உள்ளது. இவரது நடத்தில் உருவான பல பாடல்கள் இணையத்தில் ட்ரெண்ட்டானது குறிப்பிடதக்கது.

5 / 7

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர். இவருக்கு ஆந்திரா மட்டும் இன்றி கேரளாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இவரது பல படங்கள் அங்கு டப்பிங் செய்யப்படுகின்றது. அல்லுவின் நடிப்பில் வெளியான ஆர்யா 2 படம் 100 நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

6 / 7

இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தின் மூலமாக பான் இந்திய நடிகராக மாறிய அல்லு அர்ஜுன் சர்வதேச அளவில் பிரபலமானார். இவரது நடிப்பில் தற்போது புஷ்பா 2 படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலி தெரிக்கவிடுகிறது. தற்போது வரை 1000 கோடிகளை கடந்து வசூலித்து வருகிறது.

7 / 7

இப்படி பல கோடி கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே ஒருவரை மட்டும் பாலோ செய்கிறார். அவர் வேறு யாரும் இல்லை அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்னேகா ரெட்டி தான். இன்ஸ்டாவில் 28 மில்லியன் பாலோவர்களை பெற்ற அவர் தனது மனைவியை மட்டும் ஃபாலோ செய்கிறார் என்பது வைரலாகி வருகின்றது.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!