Dinner: இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்க.. இது இவ்வளவு பிரச்சனைகளை சரிசெய்யும்! - Tamil News | amazing advantages of early dinner you should know in tamil | TV9 Tamil

Dinner: இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்க.. இது இவ்வளவு பிரச்சனைகளை சரிசெய்யும்!

Published: 

10 Aug 2024 17:13 PM

Health Benefits: இரவில் உண்ணும் பெரும்பாலான உணவுகள் ஆற்றலாக மாற்றப்படுவதற்குப் பதிலாக கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு முன் சாப்பிடுவதன்மூலம், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இரவில் அதிகமாக சாப்பிடுவது தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரவு 7 மணிக்கு முன் சாப்பிட்டால் தூங்க போதுமான நேரம் கிடைக்கும்.

1 / 7ஆரோக்கியமாக

ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை உண்பது மிகவும் அவசியம். அதை விட, அதை சரியான நேரத்தில் சாப்பிடுவது அதை விட முக்கியம். பெரும்பாலான உடற்பயிற்சி நிபுணர்கள் இரவு 7 மணிக்கு முன் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இந்தநிலையில், இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

2 / 7

இரவில் அதிகமாக சாப்பிடுவதும், தாமதமாக சாப்பிடுவதும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரவு 7 மணிக்கு முன் இட்லி, இடியாப்பம் போன்ற லேசான உணவை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் நீங்கள் அவ்வப்போது சந்திக்கும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

3 / 7

இரவில் உண்ணும் பெரும்பாலான உணவுகள் ஆற்றலாக மாற்றப்படுவதற்குப் பதிலாக கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு முன் சாப்பிடுவதன்மூலம், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

4 / 7

இரவில் அதிகமாக சாப்பிடுவது தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரவு 7 மணிக்கு முன் சாப்பிட்டால் தூங்க போதுமான நேரம் கிடைக்கும். இரவு 7 மணிக்கு முன் சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் தூங்கச் செல்வது, காலையில் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் எழுந்திருக்க உதவும்.

5 / 7

இரவு 7 மணிக்கு முன் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். இது நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

6 / 7

உலகம் முழுவதும் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் படுக்கைக்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இதனால் இரவுக்குப் பிறகு சாப்பிடுவது தூக்கம், செரிமானம் போன்ற உடலின் முக்கிய செயல்பாடுகளை சரிசெய்ய அனுமதிக்கிறது.

7 / 7

இரவில் பசி எடுத்தால் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன் காஃபி மற்றும் ஆல்கஹால் போன்ற பானங்களைத் தவிர்க்கவும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், இந்த டிப்ஸ்களை பின்பற்றவும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!